தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வு – 2023க்கான அறிவிக்கை 05.05.2023 மற்றும் 23.05.2023 அன்று வெளியிடப்பட்டது. இதில் சார்பு ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை ஆகிய பணிகளுக்கு 621 மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு 129 உட்பட மொத்தம் 750 (ஆண்கள் -559, பெண்கள்- 191) காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு மொத்தம் 1,86,722 (ஆண்கள்- 1,45,804 பெண்கள்- 40,885 மற்றும் திருநங்ககைகள் – 33) விண்ணப்பித்திருந்தனர். 26.08.2023 அன்று பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு 33 மாவட்ட/ மாநகர மையங்களில் நடைபெற்றது. 27.08.2023 அன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை விண்ணப்பதாரர்களுக்கான துறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. சுமார் 80 சதவீத விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட தேர்வுகளில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு முடிவுகள் சுமார் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…