தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி குறித்தும், அகழாய்வு பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கள், மணிகள், தங்கத்திலான பொருட்கள் உள்ளிட்ட ஆய்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்டவற்றை பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்குக்கு பின்பு தற்போது மீண்டும் ஆய்வு பணிகள் தொடங்கி இருப்பது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு விரைந்து வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ள அவர், இந்த அருங்காட்சியகம் உலக அளவில் பேசக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…