42 பேரின் உருமாறிய கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து உருமாறிய கொரோனா குறித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உருமாறிய கொரோனா குறித்து மக்கள் அச்சமடையவும் வேண்டாம் ,பயப்படவும் வேண்டாம்.தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது.மேலும் 42 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட உருமாறிய கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
பிரிட்டனில் இருந்து மதுரைக்கு திருப்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.சுமார் 400 பேரை கண்டறிய முடியாததற்கு காரணம் ,அவர்கள் பலர் முகவரியை மாற்றி கொடுத்ததே காரணம் ஆகும்.சுமார் 50 பேர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.