#BREAKING:நாளை மறுநாள் வெளியாகிறது 12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு முடிவு.!

12ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது .
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிற நிலையில் இதை தொடர்ந்து பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது .
பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியானது.
தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மறுதேர்வு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. பிளஸ்-2 கடைசி தேர்வை 519 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்கிடையில் நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று நடபெற்ற நிலையில் வருகின்ற 31ம் மறுவாய்ப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025