தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் என்ற கிராமத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இங்கு கணக்கு வைத்துள்ளனர். என்னினும், கே.ஒய்.சி. படிவம் மூலம் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்துவது வழக்கம். இதனிடையே வங்கியின் மும்பை தலைமை அலுவலகம் சார்பில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகள் தொடர்பாக கடந்த ஜன.11-ம் தேதி பொது அறிவிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் அண்மையில் கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்காது இருந்தால், அதனை உடனடியாக சமர்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
அதில் அண்மையில் கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்காது இருந்தால், அதனை உடனடியாக சமர்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தங்களது கணக்கு தடைபடாத சேவைக்கு, கேஒய்சி(KYC) விதிமுறையில் வங்கிக் கணக்கு தொடங்க கேட்கப்படும் ஆவணங்களில் ஒரு ஆவணமாக என்பிஆர் (NRP) தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் ஆவணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இது கட்டாயமில்லை என்றும், தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜனவரி 31, முன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சமர்ப்பிக்காத வங்கி வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை முடக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்ட காயல்பட்டினம் பொதுமக்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, வங்கியில் தாங்கள் செய்திருந்த டெபாசிட் பணத்தை திரும்ப எடுக்க திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஒருவாரத்தில் இதுவரை ரூ.6 கோடி வரை மக்கள் தங்கள் டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இதுகுறித்து வங்கியின் மேலாளர் மாரியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஒருவாரத்தில் இதுவரை ரூ.6 கோடி பணத்தை மக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பெரும்பாலும் பெண்கள்தான் அதிகமாகப் பணத்தை திரும்பப் பெற்று, குறைந்த இருப்புத் தொகையை மட்டுமே வைத்துள்ளார்கள் எனத் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை மட்டும் ஏறக்குறைய ரூ.50 லட்சம் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மக்களைச் சமாதானம் செய்தும், என்பிஆர் ஆவணம் கட்டாயம் இல்லை எனக் கூறியும், கேட்காமல் மக்கள் பணத்தைத் திரும்பப் பெற்றனர். மேலும், கடற்கரை கிராமமான காயல்பட்டினத்தில் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தினரே அதிகமாக வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பணியில் இருப்பதால், வங்கி மூலம் அதிகமான பணப் பரிமாற்றம் நடக்கும். ஏற்கெனவே என்பிஆர், என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், வங்கியின் விளம்பரம் பணத்தைத் திரும்பப் பெற முக்கியக் காரணமாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…