“எனக்கு வந்த வேண்டுகோள்;இதற்கு முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை….!

Published by
Edison

மதுரையில் பெண்பாற்புலவர் இளவெயினிக்கு நூலகத்தோடு கூடிய முழு உருவச் சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை நிறுவ வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைக்க முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சங்ககால மன்னர்களால் போற்றப்பட்டவர்:

“சங்ககாலத்தில், குறவர் குடியிலே பெண்ணாகப் பிறந்து, இளமைக் காலத்திலேயே புலமை பெற்று, பெரும் புலவராய் விளங்கியவரும், உலகில் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழ் மொழியை வளர்ப்பதில் தன்னுடைய பங்களிப்பை நல்கியவரும், சங்ககால மன்னர்களால் போற்றப்பட்டவரும், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்தவருமான பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்கள் இரண்டாம் நூற்றாண்டில் பதினைந்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவருடைய பாடல்கள் குறித்தும், இவர் தமிழர் பழங்குடி மரபைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் புறநானூற்றின் 157-வது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக உயர்விற்கு வழிகாட்டி:

தன்னுடைய தலைவன் ஏறைக்கோனைப் பாராட்டும் பாடலில், நம்மோடு நட்பு கொண்டு நெடுநாள் பழகி வாழ்பவர் ஒரு முறை தவறு செய்துவிட்டால் அவரைப் பகைத்துக் கொண்டு அவருக்கு துயர் தருதல் சான்றோர் செயல் அல்ல என்றும் ;”நாடெல்லாம் வாழ கேடொன்றும் இல்லை” என்ற உண்மையை உணர்ந்து தன்னைப் போன்றே உலகோர் அனைவரும் உயர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பி அதற்காக உழைப்பதே தனக்கும் பிறர்க்கும் நலம் தருவதாம் என்றும்;

“எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எம்முறையைக் கையாண்டாவது வெற்றி பெற வேண்டும்” என்பது பேடிச் செயல் என்பதோடு, உண்மை வீரன், வெற்றி தரும் வழி பழி தரும் வழியாக இருத்தல்கூடாது என்ற கருத்தினைக் கொண்டிருப்பான் என்றும் தெரிவித்து, இந்த முப்பெரும் குணங்களை தன் தலைவன் பெற்றிருக்கிறான் என்று தெரிவித்து உலக உயர்விற்கு வழிகாட்டியாய் நின்று அறிவுரை கூறியவர் பெண்பார் புலவர் குறமகள் இளவெயினி அவர்கள்.

இளவெயினிக்கு அதிமுக கொடுத்த அங்கீகாரம்:

தமிழ் இலக்கியத்திற்கு குறமகள் இளவெயினி அவர்கள் ஆற்றிய பணியை போற்றிடும் வகையில், அவர் உருவாக்கிய இலக்கியப் பாடல்கள் மற்றும் அவரது முழு உருவப்படத்தை பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 2019 ஆம் ஆண்டு சேர்த்து, அதன்மூலம் அவருக்கு ஓர் அங்கீகாரத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கியது.

எனக்கு வந்த வேண்டுகோள்:

இந்தச் சூழ்நிலையில், அவரது நினைவை போற்றிடும் வகையிலும், அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திடும் வகையிலும், தமிழ் மொழிக்கான இவரது பங்களிப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணமும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பெண்பாற்புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு நூலகத்தோடு கூடிய முழு உருவச் சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை நிறுவ வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், வனவேங்கைகள் கட்சி சார்பிலும் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு, அந்த மனுவின் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல்வருக்கு எனது கோரிக்கை:

சங்க காலத்திலேயே தமிழர் பழங்குடி மரபைச் சார்ந்த பெண் ஒருவர் பெரும் புலவராய் விளங்கினார் என்பது பாராட்டிற்கும், போற்றுதலுக்கும் உரிய ஒரு செயல் என்பதால், குறமகள் இளவெயினி அவர்களுக்கு ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த’ மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

35 minutes ago

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?

கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…

39 minutes ago

மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

52 minutes ago

பாஜக உருட்டி மிரட்டி அதிமுக கூட கூட்டணி வைத்திருக்கிறது! செல்வப்பெருந்தகை பேச்சு!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…

1 hour ago

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

3 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

4 hours ago