#Breaking: மீதமுள்ள +2 தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும்.. அமைச்சர் செங்கோட்டையன்!
தமிழகத்தில் எஞ்சிய +2 பொதுத்தேர்வு, ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி, அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
மேலும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சிய தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார். இந்நிலையில், அந்த தேர்வுகளை ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்தவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியிட்ட அரசாணையில், தேர்வெழுதும் மாணவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற வலைத்தளம் மூலமாகவோ அல்லது அவரவர்களின் பள்ளிகளில் 13.07.2020 முதல் 17.07.2020 வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுசீட்டுகளை தங்களது நுழைவுசீட்டுகளை மேற்கண்ட தேதிகளில் தங்களின் தங்களின் தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துக்கு வசதி செய்து தரப்படும் எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து வரும் தேர்வர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா நோய் கட்டுப்பாடு தொடர்பான வழிமுறைகள் பின்பற்றப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.