சிகிச்சைக்கு தயங்கியதே உயிரிழப்புகள் அதிகமாக காரணம்.! மா.சுப்பிரமணியன் தகவல்.!

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 50ஐ கடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று அவர்கள் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “9 பெண்கள் உட்பட 168 பேர் விஷச்சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் உடனடியாக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் நானும் (அமைச்சர் மா.சுப்பிரமணியன்) அமைச்சர் ஏ.வ.வேலுவும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர். அதனை அடுத்து அவர்களுக்கு சிகிச்சையை தீவிரப்படுத்தினோம். இன்னும் சிலர் சிகிச்சை பெறாமல் இருந்தார்கள்.
அவரை கண்டறிந்து உடனடியாக 55 பேர் வீடுகளில் சிகிச்சை பெறாமல் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். அதில், இப்போது வரையில் 48 பேர் மரணமடைந்துள்ளனர். அதில் கள்ளக்குறிச்சியில் 25 பேர், புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் 3 பேர், சேலத்தில் 16 பேர், விழுப்புரத்தில் 4 பேர் (3 பெண்கள் ஒரு திருநங்கை) ஆவார்கள்.
அவர்களது குடும்பத்தை சந்தித்து நேற்றைக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மருத்துவ கல்லூரியில் பணியாற்றக்கூடியவர்களுடன் இணைந்து 24 மணி நேரமும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 600 படுக்கைகளுடன் இருந்தாலும், இந்த பாதிப்பிற்கு உண்டானவர்களுக்காக 50 படுக்கைகள் தயாராகவே உள்ளது.
மேலும், மெத்தனாலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பார்வை பறிபோகும், இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவை படிப்படியாக செயலிழக்கத் தொடங்கும். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.
முதல் ஒரு மணி நேரத்திற்கு எத்தனால் ஊசியும் என பல்வேறு வகை சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு வழியே , எதனால் ஊசி ரத்த செயற்கை சுவாசம் அளிக்க தொடர்ச்சியாக மருத்துவமனை வர தயக்கம் காட்டியதால் இறப்புகள் அதிகமாகின.
புதுச்சேரியில் 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தவரை 8 பேர் பொது வார்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக உள்ள 8 பேரில் 4 பேர் மிக மோசமாக உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக சேலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு பாதிக்கப்பட்டவரையும் சந்திக்க உள்ளோம்” என செய்தியாளர்கள் சந்திபில் கூறி இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025