நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.! – உயர்நீதிமன்றம் உத்தரவு.!
போலி பாத்திரம் குறித்து வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதனை ரத்து செய்யும் அதிகாரம் பத்திர பதிவாளருக்கு உண்டு. – சென்னை உயர்நீதிமன்றம்.
போலி பாத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் அதனை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பத்திர பதிவாளருக்கு இருக்கிறது என சென்னை உயர்நீதியாமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி பத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்தால், அந்த வழக்கு முடியும் வரையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் மனுதாரர் தரப்பு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அது குறித்து தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் உண்மை தன்மை அறிய மாவட்ட பத்திர பதிவாளருக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசு விளக்கம் அளித்து இருந்தது. இதனை தொடர்ந்து, பேசிய நீதிமன்ற அமர்வு, போலி பத்திரம் குறித்து ஆய்வு செய்து அதனை ரத்து செய்வதற்கு, நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், பத்திர அலுவலரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை ரத்து செய்யும் அதிகாரமும் பத்திர பதிவாளருக்கு உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.