அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை ‘தி ரெட் பலூன்’ படம் திரையிடல்.
உலக முழுவதும் குழந்தைகளின் பிரியமான விளையாட்டு பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. இந்த சூழலில் கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம் தான் 1956-ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெட் பலூன்’. இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். இந்த படத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் பள்ளி செல்லும்போது காற்று நிரம்பிய ஒரு சிவப்பு நிற பலூனை காண்கிறான்.
உடனே அந்த பலூனை எடுத்த சிறுவன், அவன் வாழ்க்கையில் அந்த பலூன் ஒரு அங்கமாக மாறியது. பின்னர் சிவப்பு நிற பலூன், ஒரு சிறுமி எடுத்து சென்ற நீல நிற பலூனை பின் தொடர ஆரம்பித்தது. இதுபோன்று இப்படத்தில் பல கற்பனை, சுவாரசியம் குழந்தைகளுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். இந்த நிலையில், தான் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில் நாளை ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்படும் என கூறியுள்ளனர்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…