அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நீண்ட காலப் போராட்டம்:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.
நேர்மையாகத் தேர்வு:
அரசு போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிப்பதுடன் அனைத்து காலிப்பணியிடங்களையும் நேர்மையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.
பதவி உயர்வு:
அரசுப் போக்குவரத்துப் பணியாளர்களுக்குக் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதுடன் ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.மேலும்,பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஓவர் டூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களும் சமமாகப் பாவிக்கப்படவேண்டும்.
7 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பஞ்சப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு திட்டம், தரமான கேண்டீன், வசதியான ஓய்வெடுக்கும் அறைகள், உடல் நலத்தையும் உள்ள ஆரோக்கியத்தையும் பேணுவதற்கான பயிற்சிகளை அளித்தல் ஆகியவையும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
பொற்கால ஆட்சி:
திமுக ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமையும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அதை செயலில் காட்டும் வகையில் நடைபெற இருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…