மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும் காரணம்.?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21 ஆம் தேதி தமிழகத்தில் திட்டங்களை துவக்கி வைக்க வருகிறார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பா.ஜ.க.விற்கு உத்வேகத்தை அளிக்கும் என்றார்.
இந்நிலையில், அமித்ஷா தமிழக வரும் நோக்கம் என்னவென்றால் தமிழகத்தில் நீர்த்தேக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை வருகின்ற 21ஆம் தேதி துவக்கி வைக்கிறார் என தகவல் வெளியாகியது. அதுமட்டுமில்லாமல், கரூர் மாவட்டத்தில் ரூ. 406 கோடி மதிப்பிலான கதவணை திட்டத்தையும் துவக்கி வைக்கிறார் என கூறப்படுகிறது.