இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை துணை ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், அறிவுலகம் போற்றுகின்ற சிந்தனை செம்மன், ஆன்றோரும் சான்றோரும் புகழ்ந்து போற்றும் தத்துவ மேதை. ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த தமிழ் மகன் பெருமைக்குரிய டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்னும் மகாகவி பாரதியின் சொல்லை மெய்யாக்கி தமிழகத்தை தலை நிமிர்ந்து நடைபோட செய்தவர் இதய தெய்வம் புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள். உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழக் காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே ஆகும். மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் இந்த கடினமான காலக்கட்டத்தில் பல புதிய கல்வித் திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் தங்கள் பாடங்களை வீட்டில் இருந்தபடியே எளிதாக கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. வருங்கால தமிழகம் ஒளிமயமாக திகழ பொறுப்புணர்வுடன் கூடிய அறிவார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கிய பொறுப்பு ஆசிரிய பெருமக்களாகிய உங்கள் திருக்கரங்களுக்கு உள்ளது. கற்பித்தலை தாண்டி மனித நேயத்துடன் சேவையாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அத்துணை ஆசிரியர் பெருமக்களுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…