சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு காரணம் பாமக – சி.வி.சண்முகம்
பாமாவுடன் கூட்டணி அமைத்ததால் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பாமாவுடன் கூட்டணி அமைந்ததே முக்கிய காரணம் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாமாவுடன் கூட்டணி அமைத்ததால் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை என்றும் அதனால் பல தொகுதிகளில் தோல்வியை தழுவியதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்றும் பாஜகவுடன் கூட்டணி காரணமாக சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதன் பின் பாஜக பற்றி பேசியது எனது சொந்த கருத்து என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.