இத்தகைய கொடூரங்கள் தொடர்வதற்கு மோடிஅரசின் பிடிவாதப்போக்கே காரணம்…! – திருமாவளவன்
காட்பாடியில் மாணவி சௌந்தர்யா நீட் தேர்வு அச்சத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரென்பது பெரும் கவலையளிக்கிறது.
இந்தியா முழுவதும் கடந்த 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார்கள்.
இந்நிலையில், நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பதாகவே, தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். அதனை தொடர்ந்து, நீட் தேர்வு எழுதி முடித்த பின் தோல்வி பயத்தால், நேற்று கனிமொழி என்ற மாணவியும், இன்று சௌந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காட்பாடியில் மாணவி சௌந்தர்யா நீட் தேர்வு அச்சத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரென்பது பெரும் கவலையளிக்கிறது. இத்தகைய கொடூரங்கள் தொடர்வதற்கு மோடிஅரசின் பிடிவாதப்போக்கே காரணம். தமிழக அரசின் நீட்விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
காட்பாடியில் மாணவி #சௌந்தர்யா நீட் தேர்வு அச்சத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரென்பது பெரும் கவலையளிக்கிறது. இத்தகைய கொடூரங்கள் தொடர்வதற்கு மோடிஅரசின் பிடிவாதப்போக்கே காரணம்.
தமிழக அரசின் நீட்விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். pic.twitter.com/5kfgUta5rS
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 15, 2021