வாக்குகள் நிச்சயம் சிதறாது, மக்கள் அனைவரும் அமமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக கூட்டணி குறித்து இரு தினங்களில் இறுதி செய்யப்படும். மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி குறித்து பேசியதாக வந்த தகவலில் உண்மையில்லை. அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்குத்தான் அமமுக தொடங்கப்பட்டது.
அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க பாடுபடும். நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன். வாக்குகள் நிச்சயம் சிதறாது, மக்கள் அனைவரும் அமமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் வரும் சட்டமனற்ற தேர்தலில் போட்டியிடுகிறோம்.
குருசேத்திர யுத்தத்தில் துரியோதன கூட்டத்தை எதிர்த்து பாண்டவர்களாகிய நாங்கள் போராடுகிறோம். தீய சக்தியையும், அதர்மத்தையும் எதிர்த்து உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது. நாங்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம். ஆகையால் எங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என கூறிய டிடிவி தினகரன், வேட்பாளர் பட்டியல் மார்ச் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…