பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியாகிறது.
கொரோனா பரவல் காரணமாக +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.இதனையடுத்து, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியது.அந்த வகையில்,பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் நிறைவுபெற்றது.
இந்நிலையில்,பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் எண் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து,செப்டம்பர் 4-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அக்டோபர் 20-ம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…