அக்.2ல் நடைபெற உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் பேரணி – ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட்

Default Image

மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட். 

அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்த பேரணியில் திரவிட கழகமும் கலந்து கொள்ளும் என ஆசிரியர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனித சங்கிலி இயக்கத்தினை திராவிடர் கழகம் வரவேற்கிறது.

மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றை அனுமதித்தால் அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின் அமைதி நிலை பாதிக்கப்படும். இதனைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது – கூடாது.

ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் காந்தியார் பிறந்த நாள் – கர்ம வீரர் காமராசர் நினைவு நாளான அக்டோபர் 2 இல் நடத்தப்படவிருக்கும் மனித சங்கிலியில் திராவிடர் கழகத் தோழர்கள் பெரிய அளவில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்