அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை மையம்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு பருவ மழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 22 ஆம் தேதி அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025