சென்னையில் தப்பி ஓடிய ரவுடி.! சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ.!
சென்னை, அயனவரத்தில் வாகன தணிக்கையின் போது ரவுடி தப்ப முயன்றுள்ளார். அவரை பெண் எஸ்ஐ மீனா சுட்டு பிடித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவள்ளூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பெண்டு சூர்யா எனும் ரவுடியை பெண் எஸ்ஐ மீனா தலைமையில் காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். போது, சென்னை அயனாவரம் பகுதியில் காவல்துறையினரை தாக்கிவிட்டு, தப்ப முயற்சித்ததாக தெரிகிறது.
துப்பாக்கி சூடு : இதனை கண்ட காவலர்கள் ரவுடி பெண்டு சூர்யாவை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது தான் வைத்து இருந்த கத்தி போன்ற ஆயுதத்தால் காவலர்களை தாக்கி உள்ளார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து தப்பி ஓட முயற்சித்த ரவுடி பெண்டு சூர்யாவை பெண் எஸ்ஐ மீனா சுட்டு பிடித்துள்ளார்.
சிகிச்சை : இதில் காலில் குண்டு காயம் பட்ட சூர்யா தற்போது மருத்துவ சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.