vanathi srinivasan [Imagesource : times of india]
சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர், சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போதையில் சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
இது தொடர்பாக அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வானதி சீனிவாசன் அவர்களும் கண்டனம் தெரிவித்துளளார்.
மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!
இதுகுறித்து வானதி சீனிவாசன் அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறையில் உள்ள சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம், தற்போது கோவில் வரை பெட்ரோல் வெடி குண்டு வீச்சுகள் தொடர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது.
சட்டம் ஒழுங்கு பற்றி மேடைக்கு மேடை பேசும் தமிழக முதல்வரும் திமுக அமைச்சர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பண்டிகை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…