ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2750 -லிருந்து ரூ.2900 ஆக உயர்வு..!
விவசாயிகளின் புதிய வகை கரும்புகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ. 2கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படும். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2750 இருந்து ரூ.2900 ஆக அதிகரிப்பு.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு. கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு. கரும்பு விவசாயிகளின் சிறப்பு ஊக்கத்தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படும்.
விவசாயிகளின் புதிய வகை கரும்புகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ. 2கோடி ஒதுக்கீடு.