மசாஜ் செண்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
மதுரவாயலில் மசாஜ் செண்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அடுத்த வானகரம் எனும் பகுதியில் ஐந்து இளம் பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் பவித்ரா. இங்கு வாடிக்கையாளர்கள் போல வந்த ஐந்து இளைஞர்களில் இரண்டு பேர் உள்ளே சென்று பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகை கழட்டுமாறு மிரட்டியுள்ளனர்.
உடனே பயந்த பெண்கள் இவர்கள் இருவரையும் தள்ளி விட்டு வெளியே ஓடி சென்றுள்ளனர். இவர்களைப் பார்த்து வெளியில் இருந்த மூன்று கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். உள்ளிருந்த இருவர் தப்பிக்க முயன்ற போது வெளியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களை பிடித்து விசாரித்த போலீசார் இவர்கள், வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ரிஷி மற்றும் சரவணன் என அடையாளம் காட்டியுள்ளனர்.