பொதுமக்கள் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விநியோக சேவைகளை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பலசரக்கு மற்றும் காய்கறிகளை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள் வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டியிருக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அதிக அளவில் வெளியில் சுற்றி வருகிறார்கள் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று தமிழக டிஜிபி, இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விதித்திருந்த நிலையில், தற்போது மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…