வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – துணை முதல்வர் பன்னீர்செல்வம்
வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி மதராசபட்டினம் விருந்து என்ற 3 நாள் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் .சென்னை தீவுத்திடலில் காலை 11 மணி முதல் இரவு 8மணி வரை உணவு திருவிழா நடைபெறுகிறது.
இந்த உணவுதிருவிழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.அவர் பேசுகையில், வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் .இயற்கை பானங்களான இளநீர், மோர் உள்ளிட்டவைகளை மக்கள் பருக வேண்டும் என்று தெரிவித்தார்.