நிற்காமல் செல்லும் ரயில்கள்.. மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.! சிவகங்கையில் 500 பேர் கைது.! 

Sivagangai Railway Station

சிவகங்கை மாவட்டத்தில் , சிவகங்கையில் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலான முக்கிய ரயில்கள் நிற்காமல் செல்வதாக பல வருடங்களாக அப்பகுதி மக்கள் புகாரளித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

குறிப்பாகா சிவகங்கையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தாம்பரம் முதல் செங்கோட்டை வரும் விரைவு ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

இதற்கு அரசு நடவடைக்காததை குறிப்பிட்டு, இன்று சிவகங்கை மாவட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். மேலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கை ரயில் நிலையம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர்களை காவல்துறையினர் அதிரடியாய் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்