உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். திரையுலகிலும், பொது வாழ்விலும் பலருக்கு தன்னால் முடிந்த அளவில் உதவிய கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை தீவுத்திடலுக்கும் வந்திருந்தனர். அதன்பிற்கு நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த் முகத்தை நேரில் பார்க்க முடியாத மக்கள் இன்று கேப்டனின் நினைவிடத்தை காண தேமுதிக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது கேப்டனின் நினைவிடத்தை காண அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. 2 நாட்கள் கழித்து கேப்டன் நினைவிடத்தை காண மக்கள் அனுதிக்கப்படுவர் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது தேமுதிக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…