கேப்டன் விஜயகாந்த் நினைவிடம்.. பொதுமக்களுக்கு அனுமதியில்லை.!

DMDK Leader Captain Vijayakanth Memorial

உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். திரையுலகிலும், பொது வாழ்விலும் பலருக்கு தன்னால் முடிந்த அளவில் உதவிய கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இறுதி பயணம் முடித்துக்கொண்டார் கேப்டன் விஜயகாந்த்.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நிறைவு.!

அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை தீவுத்திடலுக்கும் வந்திருந்தனர். அதன்பிற்கு நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் முகத்தை நேரில் பார்க்க முடியாத மக்கள் இன்று கேப்டனின் நினைவிடத்தை காண தேமுதிக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது கேப்டனின் நினைவிடத்தை காண அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. 2 நாட்கள் கழித்து கேப்டன் நினைவிடத்தை காண மக்கள் அனுதிக்கப்படுவர் என எதிர்பார்க்கபடுகிறது.  தற்போது தேமுதிக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்