கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் இரண்டு நாட்களாக வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்து வந்து உள்ளது.இந்த நாய் சாலையில் தனியாக செல்லுபவர்களை துரத்தி கடித்துக் குதறுகிறது.
அந்த வெறி நாய் கடித்ததில் சிறுவர் முதல் பெரியவர் வரை 25-க்கும் மேற்பட்டோர் கார்மாங்குடி அரசு ஆரம்ப நிலையம் மற்றும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இதில் ஆறுமுகம் என்ற முதியவர் விருத்தாசலம் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நாய் கால்நடைகளையும் விட்டுவைக்காமல் கடித்து காயப்படுத்துவதால் , கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல் கிராம மக்கள் வீட்டிலேயே கட்டிவைத்து உள்ளதாக விவசாயிகள்தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் , மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் , விவசாயத் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் நாயிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள கைத்தடியுடன் செல்கின்றன. அந்த நாயை உடனே பிடிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…