நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்- ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு ..!

Default Image

நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23-ம் தேதிக்குள்  கருத்துக்களை அனுப்பலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து  நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான 8 உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.

கடந்த 14-ஆம் தேதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.  ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.ஜே.ராஜன்,  நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்ற தகவல்களை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளோம்.

அரசு ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது என தெரிவித்தார். இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, [email protected] என்ற இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்