பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்.!
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக வேலை செய்து வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்றும், வேலைக்கேற்ற சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் நேற்று தெரிவித்த அறிவிப்பில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பொத்தியமாக வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாயானது 2,500 வரையில் உயர்த்தி 12,500 ரூபாயாக வழங்கப்படும் என்றும், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அமைச்சரின் கோரிக்கைகளை அடுத்தும் போராட்டம் தொடர்வதாக பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்தனர். இதனால் இன்று சென்னை டிபிஐ அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்து அவர்களை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம், சமூக நலகூடங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும் அடுத்து, பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.