ஓய்ந்தது பரப்புரை ! நாளை மறுநாள் இடைத்தேர்தல்
நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்துள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் நாளை மறுநாள் (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக கடந்த 2 வாரங்களாக விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வந்தது.
அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.தற்போது பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது.