நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல, வடிகட்டி தயாரிக்கப்பட்டது-கமல்ஹாசன்

Default Image

படித்தவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறது என நம்புகிறது மக்கள் நீதி மய்யம் என்று கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதேபோல்  மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.பின்னர்  2019 மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.

Image result for kamal haasan

இந்நிலையில் புதுச்சேரிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் விவசாய தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். அரசின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் கமல்ஹாசன் கூறுகையில், படித்தவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறது என நம்புகிறது மக்கள் நீதி மய்யம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல என்றும்  வடிகட்டி தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்