மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும் – அன்புமணி ராமதாஸ்
மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்களின் மருத்துவ விவரங்களுடன் கூடிய மருத்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார். மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும்.
இந்திய மக்கள் எங்கும், எந்நேரமும் மருத்துவம் பெறுவதற்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வந்தது. நிழல் நிதிநிலை அறிக்கையிலும் அறிவித்தது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி!’ என பதிவிட்டுள்ளார்.
இந்திய மக்கள் எங்கும், எந்நேரமும் மருத்துவம் பெறுவதற்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வந்தது. நிழல் நிதிநிலை அறிக்கையிலும் அறிவித்தது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி!(2/2)#PMKManifesto #PMKShadowBudget pic.twitter.com/SXaLe8ikO1
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 27, 2021