டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கொசுக்களின் உற்பத்தியை தடுக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கொசுக்களின் உற்பத்தியை தடுக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை.
சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக மருத்துவதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களும் டெங்கு காய்ச்சலை உண்டாக்க கூடிய கொசுக்கள், உங்களது வீடுகளில் உற்பத்தியாகாத வண்ணம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.