13 வயது சிறுவன் கண்டுபிடித்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி நாகலட்சுமி வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் எம்.என்.பிரனேஷ் (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த மாணவன் ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியை கற்று வரும் நிலையில், இவர் ‘ஜெட் லைவ் சாட்’ என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார். செயலியை பரிசீலித்த கூகுள், பல கட்ட ஆய்விற்கு பின் அங்கீகரித்து தற்போது இந்த சிறுவன் உருவாக்கிய செயலியை பிளே ஸ்டோரில் சேர்த்துள்ளது.
இதுகுறித்து மாணவன் பிரனேஷ் கூறுகையில், ‘இந்த செயலியை இரு வார முயற்சியில் உருவாக்கினேன். இந்த செயலியின் சிறப்பு அம்சமாக ஆடியோ, வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதிகளவு எம்.பி., கொண்ட பைல்களையும் அனுப்பலாம். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தையே அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முகநுாலில் ‘லைக்’ பதிவிடுவது போல இந்த செயலியில் அனுப்பப்படும் தகவல்களின் மீது 1000க்கும் மேற்பட்ட குறியீடுகளை கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது என்றும், எனது செயலிக்கு 2048 ஆண்டு வரை கூகுள் ஒப்பந்தம் செய்து தந்துள்ளது. 2018-ம் ஆண்டு பிந்தைய மாடல் வெர்ஷன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அதற்கு முந்தைய மாடல் போன்களில் ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்த செயலி குறித்து மாணவன் பிரனேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…