வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது
நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், பழனியில் இருந்து வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது. பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன.