கோவையில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளில் போட்டியிடும். அதில், 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வருகின்ற மார்ச் 20-ஆம் தேதி 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று சீமான் தெரிவித்தார். நாங்கள் வேலை எடுத்தபோது அனைவரும் கேலி, கிண்டல் செய்தனர். நான் ஆத்மார்த்தமாக நேசித்து உணர்வு பூர்வமாக செய்தேன். ஆனால் இப்போது வாக்கு வேண்டும் என்பதற்காக வேலை தங்களது கையில் எடுத்து வருகின்றனர். 22 ஆண்டு திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது, திமுக தான் மக்களுக்கு பிரச்சினை என கூறினார்.
நான் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு தமிழக மீனவனையும் இலங்கை கடற்படையினரால் உயிரிழக்க விடமாட்டேன். அப்படி ஒரு மீனவர் உயிரிழந்தால் நான் எனது பதவியை விட்டே விலகி விடுவேன் என கூறினார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…