மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம்.தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் இந்த நீட் தேர்விற்கு விதை போட்டவர்கள் காங்கிரஸ், திமுக தான்.
எனவே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொய் சொல்லி வாழ்ந்தவர்கள் இல்லை. மெய் சொல்லி கெட்டவர்கள் இல்லை. எனவே பொய் சொல்பவர்கள் தக்க பலனை பெறுவார்கள்.
ஒரு மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றால் பல கோடி செலவு மற்றும் மிகப்பெரிய பணி இதன் பின்னே உள்ளது. இந்நிலையில் அதிமுக அரசு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
கிருஷ்னா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை நிச்சயம் வந்தடையும். மேலும் தண்ணீர் பிரச்சினை இல்லாத நிலையை உருவாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக பச்சோந்தி போன்று இரட்டை வேடம் போட்டுள்ளது.7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை நாம் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…