பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழாவில்,ரூ.75 நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், நாட்டில் பெண்களின் திருமண வயதை நிா்ணயிப்பது தொடா்பாக பல விதமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவின் அறிக்கையின் நிலை என்ன என்று விளக்கம் கேட்டு, நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.இந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர் பெண்களின் திருமண வயது தொடா்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.பெண்கள் உயர்கல்வி பெறவும், வாழ்க்கையில் சாதிக்கவும் இது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…