நீட் போன்ற தேர்வுகளை நடத்தும் முடிவை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் -முதல்வர்..!
பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பிரதமருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு நடத்துவது தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடலாம்.
நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும். கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.