பிரதமருக்கு அச்சம் வந்துவிட்டது… ஆம் திமுக குடும்பம் தான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!
பிரதமர் குறிப்பிட்டது போல் திமுக ஒரு குடும்பம் தான், என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
அண்ணா அறிவாலயத்தில் இல்லத்திருமான நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு உரையாற்றினார், அப்போது அவர் பேசும்போது பிரதமர் மோடி, நமது திமுகவை குடும்ப அரசியல் நடத்துவதாகவும், அதை வைத்து பிழைப்பு நடத்துவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நான் பதில் அளிக்க வேண்டுமானால், திமுக வை தொடங்கிவைத்த அறிஞர் அண்ணா தொண்டர்கள், கழக உறுப்பினர்கள் அனைவரையும் தம்பி என்று தான் உரிமையுடன் அழைத்தார். இதையடுத்து கலைஞர் அவர்களும், கழக தொண்டர்கள், உறுப்பினர்கள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் உடன்பிறப்பே என்று தான் அழைத்தார்.
ஆம் பிரதமர் கூறியது போல் திமுக என்பது ஒரு குடும்பம் தான். நமது திமுக மாநாட்டிற்கு என்றாலும், போராட்டத்திற்கு என்றாலும் வருபவர்கள் அனைவர்ளும் குடும்பம் குடும்பமாக தான் வருவார்கள். மேலும் பிரதமர் மோடி திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ச்சி அடைவது நமது கலைஞர் கருணாநிதியின் குடும்பம் என குறிப்பிட்டது போல், நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ச்சி அடைவது நமது கலைஞர் கருணாநிதியின் குடும்பமான தமிழக மக்கள் தான்.
கடந்த 23 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற பிறகு, தேர்தல் குறித்து பிரதமருக்கு பயம் வந்துவிட்டது. அதன்பிறகு பிரதமர் கொண்டுவந்த சட்டம் தான் பொது சிவில் சட்டம், இதன்மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பிரதமர் நினைக்கிறார். அடுத்த 2024 தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் கற்பித்து, நாட்டில் சரியான ஆட்சி அமைவதற்கு நீங்கள் தயாராக வேண்டும் என கூறினார்.