போட்டி போட்டு உச்சத்தை தொடும்…தக்காளி, சின்ன வெங்காயம் விலை!

small onion and tomato price

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.140க்கு விற்பனை.

தக்காளி விலை தங்கம் போல் தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.10 உயர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.140க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை போல நாளுக்கு நாள் தக்காளி விலை ஒரு பக்கம் உயர, அதற்கு போட்டியாக சின்ன வெங்காயம் விலை தக்காளியை முந்தியது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை ரூ.140-க்கும், சின்ன வெங்காயம் ரூ.210-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகள், பசுமை பண்ணை கடைகள், அமுதம் அங்காடிகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனையானாலும், அது போதுமானதாக இல்லை என்பதே மக்களின் கருத்து. எனவே, கூடுதலாக தக்காளியை கொள்முதல் செய்து, அனைத்து பகுதிகளிலும் அரசு விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்