தக்காளி விலை அதிரடி சரிவு ..! இல்லத்தரிசிகள் மகிழ்ச்சி ..!

Tomato Price

தக்காளி : சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தக்காளி விலையானது நேற்றைய நாளில் ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை இன்று அதிரடியாக குறைந்து ரூ.45-க்கு விற்பனை ஆகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக அண்டை மாநிலங்களில் அடித்த வெயிலாலும், பெய்த கனமழையின் காரணமாகவும் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து நேற்று கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை ஆனது, அதிலும் சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டது.

அன்றாட சமையலுக்கு தேவைப்படும் முக்கிய காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலை இப்படி உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து வந்தனர். இதை தொடர்ந்து இன்றைய நாளில், 40-க்கும் மேற்பட்ட லாரிகளின் மூலம் 100 டன் தக்காளிகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக, நேற்றைய தினத்தை தக்காளியின் விலை ரூ.20 ரூபாய் குறைந்து 1 கிலோ தக்காளி விலை ரூ.60 விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.45-க்கு விற்பனை ஆகிறது.

இதனால், பொதுமக்கள் அதிலும் இல்லதரிசிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், படிப்படியாக தக்காளியின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்