தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.20 குறைந்து விற்பனை.!
கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அங்கு சில இடங்களில் மட்டும், ரூ.20 உயர்ந்து ரூ.130க்கு விற்பனை ஆகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை ரூ.60க்கு விற்க, வெளிச் சந்தையில் விலையேறி ரூ.120க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ரூ.150ஐ கடந்தது.