இனி வாகனங்களில் ஒட்டும் ஒளிரும் ஸ்டிக்கர்களின் விலை.! தமிழக அரசின் புதிய உத்தரவு.!

Default Image

வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களின் விலைக்கு தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்காக கனரக, இலகுரக சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ, பஸ், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது கட்டாயம் என்றும் அவை குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்களாக தான் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிப்பிக்கபடும் என்றும் தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்டிக்கர்களின் விலை சந்தையில் கிடைக்கும் ஸ்டிக்கர்களின் விலை விட 2 முதல் மூன்று மடங்கு அதிகம். அதாவது, ஒரு காருக்கு ஒட்டும் ஸ்டிக்கரின் விலை ரூ.900-1,300 வரையும், லாரிக்கு 3,000-4,000 வரையும், கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரையும் வசூலித்தனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வாகன உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்படி, தமிழக அரசின் உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததையொட்டி அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டலாம் என்றும் காரில் ஒட்டும் ஸ்டிக்கரின் விலை 300-400 ஆகவும் லாரிக்கு 1,000-1,500 வரை மட்டுமே செலவாகும் என்று போக்குவரத்து ஆணையர் புதிய ஆணையை பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்