வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு உருளைகளின் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு உருளை விலையை மாதந்தோறும் முதல் தேதி மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை நவம்பர் மாதத்துக்கும் ரூ.610 ஆகவே நீடிக்கிறது. இதேபோல், டெல்லி, மும்பையில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும் நீடிக்கிறது. ஆனால், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ரூ.78 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் சென்னை விலை ரூ.1,354 ஆகவும், டெல்லியில் ரூ.1,241.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,296 ஆகவும், மும்பையில் ரூ.1,189.50 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தின் தாக்கம் நுகர்வோரையும் பாதிக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…