245 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய குடியரசு தலைவர்..!
நேற்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னை வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா ஆகியர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், சென்னை, உத்தண்டியில் இந்திய கடல்சார் பல்கலைகழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்ண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் 245 மாணவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பட்டம் வழங்கி உரையாற்றினார். நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடான இந்தியா, பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வகிக்கின்றன.
சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.