தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காவி உடையில் திருவள்ளுவர்..!
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சாராமல்,உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவராக திருவள்ளுவர் இருக்க வேண்டும் என்ற நோக்கில் வெள்ளை உடை அணிந்திருப்பது போன்ற திருவள்ளுவரின் படத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளது.மேலும்,இப்படம் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கோவை,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் போது,காவி உடையில் திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இந்நிகழ்வு தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து,காவி உடையில் பொருத்தப்பட்ட திருவள்ளுவர் படத்தை நீக்கி,தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் படைத்தை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும்,இவ்வாறு செய்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளன.
முன்னதாக,தமிழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு, பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.