பாதிப்புகள் ஏற்படாததற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம் – அன்புமணி
மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம் என அன்புமணி ட்விட்.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்!’ என பதிவிட்டுள்ளார்.